--- --:--:-- --

சென்னையில் ஓட்டல்கள் மூடும் அபாயம்..!

10

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஏற்படும் உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், போரால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

 

ஈரான் – அமெரிக்கா மோதலின் பின்னணி காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

 

இந்த நிலைமையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, மாநில மக்களின் நலன், வணிக நிறுவனங்களின் நிலை மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக, வீட்டுத் தேவைக்காக எரிவாயு சிலிண்டர் வழங்கல் முன்னுரிமை பெற வேண்டும்; சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்; வணிக எரிவாயு சிலிண்டர் விற்பனை மற்றும் வழங்கல் நடவடிக்கைகள் கைவிடப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், வணிக எரிவாயு பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்ட உணவகங்கள், உணவுத் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்; தேவையான கூடுதல் மின்சாரத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 

முதல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கடிதம் மூலம் தமிழ்நாட்டின் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு உறுதி செய்யப்பட வேண்டிய அவசியத்தை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon