பஹ்ரைனில் ஒலித்த அபாய எச்சரிக்கை- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

மெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று (மார்ச் 3) அதிகாலை பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. அபாய எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அமைதியாக இருக்குமாறும், தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அமைச்சகம் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.