--- --:--:-- --

சென்னையில் மே 30-ம் தேதி ‘FROM RAJA WITH LOVE’ சிம்பொனி நிகழ்ச்சி..!

3

சென்னையில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி பிரம்மாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். லண்டனின் புகழ்பெற்ற ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து ஏற்கனவே லண்டன் மற்றும் துபாயில் ‘Valiant’ சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தினார்.

 

பொதுவாக வெளிநாடுகளில் மட்டுமே நிகழ்த்தப்படும் இந்த முழுமையான சிம்பொனி இசை வடிவத்தை, சென்னையில் வரும் மே 30 ஆம் தேதி நேரலையாக அரங்கேற்ற உள்ளார். FROM RAJA WITH LOVE” என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்று நேரலையாக இசைக்க உள்ளனர்.

 

சிம்பொனி மட்டுமன்றி, ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் பாடல்களும் பிரத்யேக இசை அமைப்பில் ஒலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் மற்றும் டிக்கெட் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon