ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வரும் அதிரடி மாற்றம்..!
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டும் பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, FASTag இல்லாமல் ரொக்கமாகப் பணம் செலுத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 2 மடங்கு வசூலிக்கப்படுகிறது. UPI மூலம் செலுத்தினால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 1.25 மடங்கு வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பரிமாற்றமே இருக்காது என்பதால், வாகன ஓட்டிகள் அனைவரும் FASTag அல்லது UPI முறைக்கு மாற வேண்டியது கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது.
தற்போது நாட்டில் 98 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஏற்கனவே FASTag முறையைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், டிஜிட்டல் முறைக்கு முழுமையாக மாறுவதன் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் பெருமளவு குறையும் என்றும் அனைத்துப் பரிமாற்றங்களும் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுவதால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




