தென்கிழக்கு வங்க கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று குமரி, நெல்லை உட்பட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும்,
நாளை, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 24ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




