என் காதலன் என்னைவிட்டு விலகி போக காரணமே இதுதான் – மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூர், தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் சித்தாந்த் சதுர்வேதி ஜோடியாக தோ தீவானே ஷெஹர் மெய்ன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

 

இதனால் புரொமோஷன் வேலைகள் சூடு பிடிக்க நடந்து வருகிறது. இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில், கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படும் தகவல் குறித்து பேசியுள்ளார். தனுஷ்-மிருணாள் தாகூர் காதலிக்கிறார்கள் என கூறப்பட்ட செய்திக்கு நடிகை, தனுஷ் எனது சகோதரர் போல என கூறியுள்ளார். மேலும் தன்னை பிரிந்து சென்ற காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

 

நீ ஒரு நடிகை, அதை என்னால் ஏற்க முடியாது, இது செட்டாகாது என்று சொல்லி அவன் பிரேக்கப் செய்துவிட்டார்.அவர் மிகவும் ஆர்தடாக்ஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றார்.அவரின் வளர்ப்பு அப்படி என்பதால் அவரால் என் குணத்தை ஏற்க முடியாமல் போனது எனக்கு புரிந்தது. அவர் பிரிந்து சென்றது நன்மைக்கே என்றார் மிருணாள் தாகூர்.