இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல… இதற்காக தான் இணைந்துள்ளோம் – தினகரன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் எங்களோடு பயணித்தவர். அவரும் அம்மாவின் ஆட்சி எதாவது ஒரு வழியில் அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அதை அவர் புரிந்து கொண்டிருப்பார். அவரது ஆதங்கம் எனக்கு புரிகிறது.

 

இ.பி.எஸ், ஓ.பி.எஸ், செங்கோட்டையன் என அனைவரும் எனது அருமை அண்ணன் தான். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. அம்மாவின் ஆட்சி வரவேண்டும் என இணைந்துள்ளோம் என்றார்.