வெற்றி கூட்டணியை கண்டறிவதை தவிர வேறு எந்த சிக்கலும் பாமகவிற்கு இல்லை – ஜி.கே.மணி
தனியார் சேனலுக்கு விஜய் பேட்டி: இதுவரை பெரிய அளவில் பேட்டி கொடுக்காத விஜய் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல கேள்விகள் மற்றும் கரூர் சம்பவம் குறித்து பேசியுள்ளார். நான் ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதியை முன்மாதிரியாகக் கொண்டு போராடி வெற்றிப்பெறுவேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது. நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது. மேலும் 33 ஆண்டுகால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.
கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன். தனது அரசியல் பயணம் நீண்டகால பயணம், அரசியல்தான் தனது எதிர்காலம் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




