விக்கிரவாண்டி அருகே விபத்து..!
விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 35 பேர் காயமடைந்தனர்.
ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




