சமூக நலத்துறை வேலை வாய்ப்பு..!
தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் பணி அனுபவம் இருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 10,592 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்: 503, 5வது தளம், விருதுநகர் – 626002 விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.12.2025. இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





