கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5-க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்து விட்டு எரிவதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், 5க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.