திருவாடானையில் அதிமுக EPS, OPS அணியினர் அருகருகே நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தினை அதிமுக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் ஒரே இடத்தில் அருகருகே கொண்டாடினர்.

முன்னதாக இரண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தது. அதற்கு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழவில் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




