--- --:--:-- --

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்..!

9

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 195 டாஸ்மார்க் கடைகளை மூடி, 1000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கடை சாவியும், காலி பாட்டலில் ஒட்டும் ஸ்டிக்கரையும் டாஸ்மார்க் மேலாளரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

 

விழுப்புரம் தமிழ்நாடு வாணிபக் கிடங்கு டாஸ்மாக் குடோன் முன்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காலிபாட்டிகள் திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்பதாகவும், ஆனால் டாஸ்மாக் பணியாளர்கள் மீது இப்பணியை திணிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

 

மேலும், இதுகுறித்து இன்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் இத்திட்டம் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மேலும் பணி சுமை அதிகரிப்பதாக தெரிவித்தனர். இடவசதி சுகாதார சீர்கேடுகூடுதல் பணி சுமை, மன அழுத்தம், ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும், எனவே தங்கள் மீது திணிக்கும் இந்தப் பணியினை ஒப்பந்ததாரர்களிடேமே ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

 

அத்துடன் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் டாஸ்மாக் மேலாளர் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தெரிவித்தார்கள். இதைக் கண்டித்து நாளை (27.11.2025) வியாழன் அன்று விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – மாவட்டத்தில் உள்ள 195 டாஸ்மார்க் கடைகளை மூடி 1000-க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் பணியாளர்கள் கடை சாவியும், காலி பாட்டலில் ஒட்டும் ஸ்டிக்கரையும் டாஸ்மார்க் மேலாளரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon