புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சாச்சனா..!
விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் சாச்சனா. ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்திருப்பவர் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி மிகவும் பிரபலமானார்.
இளம் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிக்பாஸ் 8 வீட்டில் 60 நாட்களுக்கு மேல் விளையாடி கலக்கினார். அதன்பின் அதிகமாக படங்களில் அவரை காணவில்லை, ஆனால் இன்ஸ்டாவில் அதிகம் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





