முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..!

சென்னை அடுத்த திருப்போரூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் மதுபோதையில் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டு, தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இதேபோல மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.