சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம், ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் மகேஷ் மற்றும் சென்னை மண்டல மேலாளர் சைலேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபாதை மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




