அணில் மரத்தில் இருக்கணும்: விஜய்யை சீண்டிய சீமான்
தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார்.
செஞ்சி நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புலி வெறிகொண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது அணில் குறுக்கும் மறுக்கும் ஓடுவதாகவும், அணில் பத்திரமாக மரத்தில் ஏறி இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார். ஆரம்பத்தில் தம்பி என விஜய்யை அழைத்து வந்த அவர், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





