--- --:--:-- --

நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன்!

2

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 4 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூலி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார்.

 

இந்த சந்திப்பின் போது ரஜினிக்கு நயினார் நாகேந்திரன் விநாயகர் சிலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் உடன் நயினார் நாகேந்திரன் பேசிய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

சமீபத்தில் நடிகர் ரஜினி 50 ஆண்டுகால திரை வாழ்க்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அவரை சந்தித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் விரைவில் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon