ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் அறிவிப்பு..!
டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் திங்கள் கிழமை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதி நிலவ அனைத்து ஒத்துழைப்பும் செய்ய தயார் எனவும், அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் என முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் நேற்று புடினை சந்தித்த நிலையில், ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேச உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




