கடமையைச் செய்ய டெல்லி செல்கிறேன்: கமல்ஹாசன்
ராஜ்யசபா MP ஆக நாளை கமல்ஹாசன் உள்பட 6 பேர் பதவியேற்கின்றனர். டெல்லி செல்லும் முன் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், இந்தியனாக தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை இது என்றார்.
மிகவும் பெருமையோடு டெல்லிக்கு செல்வதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சு குறித்து தற்போது கூற இயலாது என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





