முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றிட விழைகிறேன் – தவெக தலைவர் விஜய்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த திங்கட்கிழமை காலை வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இதனிடையே, இன்று காலை முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
முதலமைச்சருக்கு ஆஞ்சியோ செய்து பார்த்தார்கள், தற்போது அவர் நலமுடன் உள்ளார்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




