--- --:--:-- --

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

2

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

 

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோயில், திருப்போரூர், திருக்கழுக்குன்றும், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 30 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த கனமழையால், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகளும், பணி முடிந்து திரும்பியோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

 

அதேபோல திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. குறிப்பாக, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. குருவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon