ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
திருப்பூர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா என்பவர் திருமணமான 78 நாட்களில் வரதட்சனை கொடுமை மற்றும் கணவர் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன் தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோவாக தனது வாக்குமூலத்தை அனுப்பிவிட்டு ரிதன்யா உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து மாமியார் சித்ராதேவி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமீன் வழங்க ரிதன்யா பெற்றோர் ஆட்சேபனை தெரிவித்து இடையீட்டு மனு அளித்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்நபான இரு தரப்பு வாதங்கள் இன்று நடைபெற்றது.இதில் சித்ராதேவி தரப்பு வழக்கறிஞர் அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர் சான்றிதழ்களை வழங்கி இருந்தார். எனினும் வழக்கின் தீவிரம் காரணமாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்து செய்து மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




