கடலூர் கோர விபத்து: மூவர் குழு விசாரணை துவக்கம்
கடலூர் அருகே பள்ளிவாகனம் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி திருச்சியில் விசாரணையை துவக்கியுள்ளது. ரயில் வருவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? ரயில் கடந்த போது ரகசிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டதா என பல கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவுசெய்யப்படுகின்றன.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





