வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 21-ம் தேதி வால்பாறை MLA அமுல் கந்தசாமி காலமானதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பொதுவாக சட்டமன்ற தொகுதி காலியானால் அந்த தொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இன்னும் ஓராண்டில் சட்டமன்ற தேர்தல் வருவதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என EC தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




