--- --:--:-- --

கமல் உட்பட திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்பு..!

3

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் சார்பாக உள்ள 6 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது.

 

இதையடுத்து, திமுக மற்றும் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியல் வெளியானது. திமுக சார்பில் வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 

மேலும் கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். மேலும் திமுக கூட்டணியிலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

 

இவர்கள் அனைவரும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாக உள்ளனர்.12ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் உள்ள நிலையில், பனிரெண்டாம் தேதி போட்டியின்றித் தேர்வானதற்கான சான்றிதழ்களைப் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ள உள்ளனர்.

 

மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்ட 7 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon