விராட் கோலி ஸ்பெஷல் டி-ஷர்ட் ரெடி..!
நாளை பெங்களூருவில் மீண்டும் தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில், RCB vs KKR அணிகள் மோதவுள்ளன. இதில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் கோலியை கெளரவிக்கும் விதமாக ரசிகர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து வர முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, புதிய டிசைனுடன் கூடிய வெள்ளை ஜெர்ஸிக்கள் சந்தைக்கு வந்துள்ளன. இதில், கோலியை கொண்டாடும் விதமாக படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




