--- --:--:-- --

சென்னையில் இந்த நிதியாண்டில் 30 பூங்காக்கள் அமைக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

3

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, தி.நகர் கருணாநிதி, வடபழனியில் சிம்ஸ் மருத்துமவனை அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவை மேம்படுத்த அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, இந்தப் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணிகள் அனைத்து வரும் 30ம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து, தனது தொகுதியில் உள்ள பூங்காவை மேம்படுத்தும் பணி தனியாரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று .நகர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, 2021 வரை சென்னையில் 704 பூங்காவும், 610 விளையாட்டு திடல்களும் இருந்தது. இந்த ஆட்சி அமைந்த பிறகு 81 கோடியில் 204 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 307 பூங்காக்கள் 24 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

தற்போது சென்னையில் 908 பூங்காவும், 724 விளையாட்டு திடல்களும் உள்ளது. தற்போது 32 பூங்காக்கள் 8 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. 273 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக பதில் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon