--- --:--:-- --

திருவாடானை கல்லூரியில்   இயற்கை மூலிகையில்  பொருட்கள் செய்யும் பயிற்சி..!

5

ராமநாதபுரம்  மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், திருவாடனை வட்டாரம்  தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி இதன் தொடக்க நிகழ்வு ஏப்15 முதல்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்கை மூலிகையில்  பொருட்கள் செய்யும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

 

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிலையில்  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அதன் இயக்குநர் அம்பலவாணன் IAAS  குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

 

அவர்  கூறும் பொழுது பெண் தொழில் முனைவோர்களுக்கு பற்றியும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளித்து பேசினார். மேலும் திட்ட மேலாளர் சண்முகராஜ் பெண் தொழில் முனைவோர் டிஜிட்டல் மார்க்கெட்டிங்  மூலம் எப்படி தொழிலை விரிவு படுத்த முடியும் என்பதை தெளிவாக விளக்கி கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருவாடானை வட்டாச்சியர் ஆண்டி பங்கேற்று இந்த அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் பெண்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களை சமூகத்தில் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.

 

இந்த பயிற்சியில் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனம் வங்கிக் கடன் பெறுவது எப்படி?, தொழில் தொடங்கும் முறைகள், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்ற முக்கிய தலைப்புகளில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

 

மேலும், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் பொன் வேல்முருகன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இந்த பயிற்சி மூலம் பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்ந்து சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் பயனடைவது குறிப்பிடத்தக்கது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon