நாளையோடு பள்ளிகள் முடிகின்றன..!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் நாளையோடு (ஏப்ரல் 17) தேர்வுகள் நிறைவடைகின்றன. அடுத்த வாரம் இறுதி வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகளை, கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏப்ரல் 17-ம் தேதியோடு நிறைவு செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, நாளை முதல் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




