சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா காலமானார்..!
சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா (75) உடல்நலக்குறைவால் காலமானார். 1973-ல் கட்சியில் சேர்ந்த இவர் DYFI சங்கத்தை வளர்த்தெடுத்ததில் முக்கியமானவர்.
தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். சின்னையா உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சின்னையாவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




