தெருநாய்கள் கடித்துக் குதறியதால் சிறுவன் உயிரிழப்பு..!
ஆந்திராவில் தெருநாய்கள் கடித்துக் குதறியதால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாஸ்பிடலில் சிறுவனின் உடலைப் பார்த்து பெற்றோர் கண்ணீர் விட்ட வீடியோ காண்போரின் மனதை கனக்கச் செய்துள்ளது.
குண்டூரில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஐசக்கை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்துள்ளன. இதனால், படுகாயமடைந்த சிறுவன், ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




