தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை..!
தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றும் ஒரு தொண்டனாக எனது பணி தொடரும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
மக்கள் பிரச்சினை குறித்து மட்டும் பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன.அதன்பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார். அதன்படி, அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் மாற்றம் செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியானது.
தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம் பற்றி வரும் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறி வந்த அண்ணாமலை, பாஜக-வின் தொண்டனாகப் பணியாற்றவும் தயார் என கட்சித் தலைமையிடம் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை. சாதாரண தொண்டனாக நான் தொடருவேன். தமிழகத்தில் பாஜக, ஆட்சி ஒரு நாள் கண்டிப்பாக மலரும். ஒரு தொண்டனாக கட்சி சொல்லும் பணியை நான் செய்து முடிப்பேன்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




