5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…!
மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப். 4) விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், காசி விசுவநாத சுவாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப். 7, 11-ல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏப். 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




