கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்கி மற்றும் ப்ரியா இருவரும் திருமணத்திற்கு முன் நடத்திய போட்டோ சூட்டில் எதிர்பாராத விதமாக வண்ணப் புகை குண்டு வெடித்ததில் மணப்பெண் பிரியா காயம் அடைந்தார்.
திறந்தவெளி தோட்டத்தில் போட்டோ சூட்டின் பொழுது மணப்பெண்ணை மணமகன் தூக்கிய நிலையில் பின்புறத்தில் வண்ணப் புகை குண்டுகள் வெடிக்கப்பட்டன. அப்பொழுது மணப்பெண் மீது ஒரு குண்டு விழுந்து வெடித்ததில் முதுகு மற்றும் இடுப்பில் தீக்காயம் ஏற்பட்டது.
தலை முடியும் கருகிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.