அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!
தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2 ஆவது முறையாக அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் இது.
இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார். தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால், சலுகைகள், புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




