ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொள்ளும் 7 கோள்கள்.. இன்று நிகழப் போகும் அதிசயம்..!
வானிலை அதிசயங்கள் நம்மை எப்பொழுதும் வியப்படையை செய்து வருகின்றன. அந்த வகையில் மற்றொரு அதிசயம் இன்று நிகழவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஏழு கோள்கள் ஒரே வரிசையில் வரவிருக்கிறது. சனி, புதன், நெப்டியூன், வெள்ளி, யுரேனஸ், வியாழன், செவ்வாய் ஆகிய ஏழு கோள்களும் கிட்டத்தட்ட நேர்கோட்டில் இருப்பது போன்று அரிய காட்சி ஏற்படவிருக்கிறது.
இந்த நிகழ்வை இன்று முதல் மார்ச் 5ம் தேதி வரை காண முடியும் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் அவற்றை வெறும் கண்களாலும் பார்க்க முடியும் என கூறியுள்ளனர்.
சென்னையில் மாசு குறைந்த பகுதிகளில் இருந்து இந்த அதிசய நிகழ்வினை காண முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





