போலியான பெயரில் சுற்றினேன் எனக்கூறிய ஸ்ருதி ஹாசன்..!
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். பாடகி, இசையமைப்பாளர், நாயகி என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “நான் கமல்ஹாசனின் மகள் என்பதால் பொதுவெளியில் நான் சுதந்திரமாக சுற்றுவதற்கு சிரமமாக இருக்கும். அதனால், நான் கதாநாயகியாக நடிக்க துவங்குவதற்கு முன் எனக்கென ஒரு போலியான பெயரை உருவாக்கி அந்த பெயரிலேயே கொஞ்ச நாட்கள் வெளியே சுற்றினேன்.
இதனால் என்னை பற்றி தெரியாதவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி நான் விரும்பியபடி பேச முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




