டியோ ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்ற பள்ளி மாணவன் கார் மோதி பலி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக வாங்கி தரப்பட்ட டியோ ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்ற 12ம் வகுப்பு மாணவன் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுதர்சன் என்ற அந்த மாணவர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. வளைவு ஒன்றில் எதிரே வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட சுதர்சன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





