தமிழ்நாட்டில் விரைவில் 1000 முதல்வர் மருந்தகம் திறப்பு..!
தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகம் வரும் 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். அதிகபட்சமாக மதுரையில் 52 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது. கடலூர் 49, கோவை 42, தஞ்சை 40 மருந்தகங்கள் அமையவுள்ளன.
பிரதமரின் மக்கள் மருந்தகம் உள்ளிட்ட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில், குறைவான விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும், மக்களுக்கு இது உதவியாக இருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




