திருப்பூரில் குஷ்பு பேட்டி..!

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தொழில் கூட்டமைப்புடன் பட்ஜெட் விளக்க கலந்துரையாடல் கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு பெண்கள் பாதுகாப்பிற்காக அனைத்து கட்சியைச் சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து மாநில அரசு சார்பில் கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும் என தெரிவித்தார். உடன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் இருந்தனர்.