லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி..!
தாம்பரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி.
பிரிண்டிங் வேலை செய்து வந்த இவர் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் வாங்கி தருவதாக கூறி ஓசூரில் பலரிடம் லட்ச கணக்கில் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த பாலாஜி உடலில் தீ வைத்து தற்கொலைக்க முயன்றார்.
தகவலறிந்து வந்த போலீசார். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலாஜியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





