--- --:--:-- --

பிரசவ வலியால் துடித்த பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்..!

8

வாணியம்பாடி அருகே அரசு பேருந்து நடு வழியில் இறக்கி விடப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி நிர்மலா இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் குடும்பத்தோட கர்நாடகா மாநிலத்தில் காபி கொட்டை பறிக்கும்படி செய்து வருகிறார்.

 

நிறை மாத கர்ப்பிணி நிர்மலாவுக்கு பிரசவ காலம் என்பதால் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது திருப்பத்தூர் மாவட்டம் டோல்கேட் அருகே அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்த கர்ப்பிணியை அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பாதியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து டோல்கட்டில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது மருத்துவமனையில் தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

 

இந்த நிலையில் பிரசவ வலியில் துடித்த அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காமல் பாதியிலேயே இறக்கி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon