--- --:--:-- --

குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் அத்துமீறல்..!

4

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் 30 வயது பெண் ஒருவர் தனது நிலத்தை விற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தா டாக்ஸி என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்திருக்கிறார் அந்தப் பெண்.

 

தான் சீட்டு கட்டியதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து விட்டிருக்கிறார். அந்த வகையில் சுமார் ஒரு கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டியுள்ளார். தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் இளம்பெண் சேர்த்து விட்ட நபர்களுக்கு ரூபாய் 40 லட்சம் கொடுத்துள்ளனர்.

 

மீதி பணத்தை அந்தப் பெண் கேட்டிருக்கிறார், ஆனால் நிறுவனம் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக பணத்தை அவரிடம் அடிக்கடி கேட்டு வந்திருக்கிறார். அதனால் அவர் வேறொருவரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் தனது தாயாருடன் கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று இருக்கிறார்.

 

பின்னர் அருகே உள்ள தங்கும் விடுதிக்கு வருமாறு கூறி இருக்கின்றனர். அதன் பின்பு தாயும் மகனும் விடுதிக்கு சென்று இருக்கிறார்கள். அங்கிருந்த கும்பல் ஒன்று பணத்தை கொடுக்க முடியாது என்றும் பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள். மயக்கம் மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

 

பின்னர் அந்த பெண்ணிடம் உன்னை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ மற்றும் நிர்வாண வீடியோ எங்களிடம் இருக்கிறது என கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் இதை கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட பெண் இந்த தகவலை புகாராக எழுதி கடந்த மாதம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் மனு கொடுத்து இருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon