நாம் தமிழர் நிர்வாகி கைது..!

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

 

அப்பொழுது நாம் தமிழர் நிர்வாகி அஜய் மேடையில் ஏரி பெரியாரை விமர்சித்து கோஷமிட்டத்துடன் அவரது சிலையை காலணியால் தாக்கினார். உடனடியாக அங்கிருந்த மக்கள் நாம் தமிழர் நிர்வாகியைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

 

இதனையடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.