அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!
பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் CM ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் CM ஸ்டாலின், Dy CM உதயநிதி, அமைச்சர்கள், எம்பிக்கள், MLAக்கள் உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




