அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜா சாலை இருந்து மெரினா கடற்கரை வரை அமைதிப் பேரணியாக சென்று, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதில் கட்சித் தொண்டர்கள் பங்கேற்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.