போடப்பட்ட ஊசி..அடுத்தடுத்து நோயாளிகளுக்கு ஏற்பட்ட நிலைமை..!
சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து ஒவ்வாமையால் ஆறு நோயாளிகளுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவுக்குள் இருந்த நோயாளிகளுக்கு குறிப்பிட்ட வகை மருந்தை மருத்துவர்கள் ஊசி மூலம் செலுத்தியதை தொடர்ந்து ஆறு பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ஒரு நோயாளி உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் பேசிய பொழுது நோயாளிகளுக்கு மருந்து ஒவ்வாமை ஏற்பட்டது குறித்து விசாரித்து வருவதாக விளக்கம் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





