ரேஷனில் பாமாயில், பருப்பு நிறுத்தமா? அரசு விளக்கம்

ரேஷனில் மலிவு விலையில் தற்போது பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விரைவில் அவை நிறுத்தப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

 

ஏற்கெனவே உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அது வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. இதனால் மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், பாமாயில், துவரம் பருப்பை நிறுத்தும் திட்டமில்லை, அது வதந்தி என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.