கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!
திருப்பத்தூர் மாவட்டம் பின்னமங்கலத்தில் இளைஞரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெயிண்டிங் ஒப்பந்ததாரரான செல்வகுமார் வாங்கிய கடனை அடைப்பதற்காக நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
அந்த நபர் முறையாக பணம் செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் செல்வகுமாருக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





